தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவன் மீது சுடுதண்ணீர் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மாநெல்லூர் விவேகானந்தா நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி நாகலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த கார்த்திக், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அடுப்பில் இருந்த சுடு தண்ணீரை எடுத்து கணவர் மீது ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயமடைந்த கார்த்திக், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகலட்சுமியை தேடி வருகின்றனர்.

Night
Day