எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தங்க நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையனை காவல்துறையினர் சுட்டுப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை குத்தன் சாலை பகுதியில் வசித்து வரும் கஜேந்திரன் கார்த்திகா என்ற தம்பதியினர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றிருந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகைகள், ஒரு மடிக்கணினி மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அண்ணாமலை நகர் காவல்துறையினர், கன்னியாகுமரி சேர்ந்த ஸ்டீபன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அரப்போது அந்த நபர் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதோடு சித்திலவாடி ஒத்த பனைமரம் அருகே நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து நகைகளை மீட்க காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் ஒருவரை வெட்டிவிட்டு கொள்ளையன் தப்ப முயன்றுள்ளார். அப்போது அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர்.