எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மல்லிப்பட்டினம் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ரமணி என்பவர், வகுப்பை முடித்துவிட்டு ஓய்வறையில் இருந்தபோது, உள்ளே நுழைந்த மதன் என்ற இளைஞர், ஆசிரியையின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரமணியை, சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மதனும், கொலை செய்யப்பட்ட ரமணியின் தம்பியான சாரதியும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதனால் ரமணிக்கும், மதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரிடம் பெண் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் காதலையும் ரமணி துண்டித்ததால், ஆத்திரமடைந்த மதன்குமார், பள்ளியில் வைத்து ஆசிரியையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவத்துள்ளனர்.