தனது மனைவி பிரிந்து செல்ல ஆம்ஸ்ட்ராங்தான் காரணம்-வாக்குமூலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் அல்லது நினைவு நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங் கொலையை நடத்தி முடித்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதாரர் பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள் அல்லது நினைவு நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங் கொலையை நல்லபடியாக நடத்தி முடித்ததாக அவருடைய தம்பி பொன்னை பாலு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல், தன்னை ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதால், பயத்தில் தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் பொன்னை பாலு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அண்ணனும் இல்லை மனைவியும் பிரிந்து சென்று விட்ட நிலையில், தான் கொல்லப்படுவதற்கு முன்பு ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டாகவும், அதற்காக தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேஷின் கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும் பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Night
Day