தனியாக சுற்றித்திரிந்த 2 வயது பெண் குழந்தை - காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 2 வயது குழந்தை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனியாக அலைந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போச்சம்பள்ளி நான்குவழி சாலையில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று சுற்றித்திரிந்துள்ளது. ஒரு மணி நேரமாக குழந்தை தனியாக இருந்ததை கண்ட பாலாஜி என்பவர், குழந்தையை மீட்டு உணவு பொருட்கள் வாங்கிக் கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து குழந்தையை காவல்நிலையத்தில் அமர வைத்த போலீசார், குழந்தை எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day