தனியார் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு -4 தனிப்படைகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நேச பிரபு என்பவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் சட்டவிரோத மதுவிற்பனை செய்யப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இரவில் வீட்டில் இருந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேசபிரபு வெளியே வந்த நேரம் பார்த்து அவரை அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் நோட்டமிட்டு வருவதாக அவசர உதவி எண் மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவலர்கள் அலட்சியமாக பேசி அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் உள்ள காவலர்கள் செய்தியாளரை அழைத்த போது அவர்களும் இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல், அலட்சியம் காட்டியுள்ளனர். நடவடிக்கை எடுக்காமல் செய்தியாளரை மர்மநபர்கள் குறித்து தகவல் சேகரித்துவிட்டு வழக்கம் போல் காவல்துறையினர் செயல்பட்டதால் செய்தியாளர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில், செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day