தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிராம மக்‍களின் தொடர் போராட்டம் காரணமாக விழுப்புரம் அருகே செயல்பட்டு வந்த தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்‍கப்பட்டது.

வேடம்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்‍கப்படுவதுடன், பொதுமக்‍கள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்‍கு ஆளாவதால், இந்த ஆலையை மூடக்‍கோரி வேடம்பட்டு ஊராட்சி மக்‍கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தற்போது இந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக்‍காற்றால் 20க்‍கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்‍கப்பட்டு முண்டியம்பாக்‍கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சர்ச்சைக்‍குரிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை தற்காலிகமாக மூடி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

Night
Day