தனியார் வங்கிக்குள் நுழைந்து ஊழியருக்கு சரமாரி வெட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் முன்னாள் ஊழியர் வாடிக்கையாளர் போல் நுழைந்து ஊழியரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கியில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த முன்னாள் வங்கி ஊழியர் சதீஷ், அந்த வங்கியில் ஊழியராக பணிபுரியும் தினேஷ் என்பரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவத்திற்கு காரணமான சதீஷை அங்கிருந்த ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தனது வேலை பறி போனதற்கு தினேஷ்தான் காரணம் என்ற கோபத்தில் வெட்டியதாக சதீஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

varient
Night
Day