எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் கல்லூரி மாணவி சுயநினைவின்றி இருப்பதாக, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
லாலாக்கொட்டாய் பகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண், நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த காயத்ரியை, அவரது பெற்றோர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசுாதனையில் அவரது ஒட்டுக்குடல் இருப்பதாக மருத்துவர் ராஜேஷ் கூறியதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து, காயத்ரிக்கு தடுப்பூசி போட்டதால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், காயத்ரியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு 2 நாட்களுக்கு பிறகு காய்த்ரி சுயநினைவின்றி உள்ளார். இந்நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் தனது மகள் சுயநினைவு இழந்துவிட்டதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.