தருமபுரி: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 சிறுவர்கள் அடித்துக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 சிறுவர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முண்டாசுபுரவடை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் - பிரியா தம்பதியின் 3 வயது மகன் தர்ஷன் மற்றும் 5 வயது மகன் சஷ்வந் நேற்று காணாமல் போன நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 2 சிறுவர்களையும் படுகாயங்களுடன் மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 3 வயது சிறுவன் தர்ஷன் உயிரிழந்தான். முதற்கட்ட விசாரணையில், பிரியா-வெங்கடேசனின் தகாத உறவுக்கு 2 பிள்ளைகளும் இடையூறாக இருந்ததால் வெங்கடேசன் திட்டமிட்டு சிறுவர்களை அழைத்து சென்று மிளகாய் பொடி தூவி கொடூரமாக அடித்துக் கொன்றது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் சஷ்வந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Night
Day