எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லை விரைவு ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 பேர் கொண்டு சென்ற பைகளில் இருந்து தெரியவந்ததது. இதையடுத்து, 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த 4 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் உணவகத்தில் தேர்தல் பறக்கும் படையின் திவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வருமான வரித்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தெரிவித்துள்ளார்.