திண்டுக்கல்: டாஸ்மாக் கடைக்கு உடன் வராத இளைஞருக்கு அரிவாள் வெட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடைக்கு உடன் வராத, இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பூலாங்குளத்தை சேர்ந்த செல்வமணி என்பவர் பைக்கில் பூலாங்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் செல்வமணியை வழிமறித்து டாஸ்மாக் கடை எங்கு உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு செல்வமணி வழிகாட்டிய போது அந்த இளைஞர்கள் அவரையும் டாஸ்மாக்கிற்கு அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த 2 பேர், செல்வமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

varient
Night
Day