திண்டுக்‍கல்: திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரான சிவா என்பவரது தந்தை நாகராஜ் பாறைப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் எழுந்து ஓட துவங்கியபோது அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், நாகராஜின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day