திமுகவின் முகமூடியை கிழித்தெறிந்த புகைப்படம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரன் வீட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் உணவருந்தும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். ஆனால், சைதை கிழக்குப் பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக ஞானசேகரன் இருந்து வந்ததாக, திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் செய்தி வந்துள்ளது. இந்த நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உணவு அருந்தும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், ஞானசேகரனுக்கு மாவு கட்டு போட்ட புகைப்படத்தில், பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது. முதலில் வெளியிட்ட புகைப்படத்தில், கையில் சிறிய காயம் இருப்பது போன்றும், பின்னர், வெளியிடப்பட்ட புகைப்படத்தில் கை முழுவதும் மாவு கட்டு போட்டது போன்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day