எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக சைதாப்பேட்டை பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக பதவி வகித்தது அம்பலமானது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன் மீது ஏற்கனவே 450 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், அவர் திமுக சைதாப்பேட்டை பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக பதவி வகித்தது அம்பலமாகியுள்ளது.
இதனால் ஞானசேகரன் திமுக நிர்வாகி என்பது தெரிய வந்ததும், போலீசார் அவரது வீட்டின் முன்பு இருந்த திமுக போஸ்டர்களை அவசர அவசரமாக கிழித்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை கல்வெட்டுடன் உடைத்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில் ஞானசேகரன் திமுக நிர்வாகி என்ற ஆதரத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.
மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அந்த நபர், உள்ளூர் திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகி திமுக உறுப்பினராக மாறி இருப்பதாக குறிப்பிட்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் நசுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய அண்ணாமலை, உள்ளூர் காவல் நிலையத்தின் கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படாமல் இருப்பதன் மூலம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். உள்ளூர் திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை அவரை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என்று கேட்டுள்ள அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ள்ளார்.