திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில், அயன் திரைப்பட பாணியில் பயணி ஒருவர் 977 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இன்று காலை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு பயணியின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவரை பரிசோதனை செய்தபோது, மலக் குடலில் பேஸ்ட் வடிவில் 3 உருண்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆசன வாயில் அவர் மறைத்து கடத்திவந்த 977 கிராம் எடையுள்ள 70 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day