திருச்சி - வெடிகுண்டு மிரட்டல் - பள்ளிகளுக்கு விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி, கருமண்டபம் ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேனிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கீழ தேவதானம் சந்தானம் வித்யாலயா, தென்னூர் ராஜாஜி வித்யாலயா பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். தகவலின் பேரில் சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து தென்னூர் மகாத்மா காந்தி நினைவு நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜாஜி வித்யாலயா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Night
Day