திருச்சி : லஞ்ச புகாரில் 2 எஸ்.எஸ்.ஐ., 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே லஞ்ச புகாரில், 2 எஸ்.எஸ்.ஐ. மற்றும் 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி-நாமக்கல் சாலையில் ஏலூபட்டி சுங்கச்சாவடி அருகே வாகனங்களை மறித்து போலீசார் லஞ்சம் கேட்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பான விசாரணையில், 2 எஸ்.எஸ்.ஐ. களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார். மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி வாகனங்களை மறித்து பண வசூலில் ஈடுபட்ட ராஜ்கமல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day