க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே திருவள்ளூா் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓதியூர் மாதா குளம் அருகே இளைஞர் ஒருவா் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் செய்யூர் காவல் நிலையத்துக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினா் உயிரிழந்த நிலையில் கிடந்த இளைஞர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சரஸ்வதி நகரை சேர்ந்த சோழராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...