திருப்பூரில் பல வங்கிகளில் போலி பெயர்களில் அடகு வைக்கப்பட்ட 5.3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் பல வங்கிகளில் போலி பெயர்களில் அடகு வைக்கப்பட்ட கேரள வாடிக்கையாளர்களின் சுமார் 5 கிலோ தங்க நகைகளை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் மதா ஜெயக்குமார். இவர், கேரள மாநிலம் வடகரை பகுதியில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிர வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளத்தில் உள்ள பலாரிவடம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த கிளைக்கு சென்று மாதா ஜெயக்குமார் மேலாளராக பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, வடகரை கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறுமதிப்பீடுக்கு ஆய்வு செய்தபோது, 17 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இர்ஷாத், போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வங்கி கிளை மேலாளராக பணிப்புரிந்த மாதா ஜெயக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதா ஜெயக்குமார் திருப்பூரை சேர்ந்த அவரது நண்பரும் தனியார் வங்கி மேலாளருமான கார்த்திக் உதவியுடன், பாங்க் ஆஃப் மகாராஷ்டிர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 17 கோடி ரூபாய் மதிப்புள்ள 26 கிலோ நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது. அந்த நகைகளை கார்த்திக் உதவியுடன், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் பல நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மதா ஜெயக்குமாரை கைது செய்த கேரள போலீசார், பல வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day