திருப்பூர்: குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவன் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது மனைவியுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தில், தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி கணவன் மனைவிக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வம் தனது மனைவி தீபாவை தாக்கியதில் அவர் பின்தலையில் அடிப்பட்டு மயக்கம் அடைந்தார். இதனால் பயந்து போன செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் மயக்கத்தில் இருந்த தீபாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Night
Day