திருப்பூர்: நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறையினர் எனக்கூறி ரூ. 1.69 கோடி மோசடி - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறையினர் எனக்கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தனர். திருப்பூர் நூல் வியாபாரி அங்குசாமியிடம், கட்டுமான நிறுவனத்திற்கு ரொக்கப்பணம் தேவைப்படுவதாகவும், தரப்படும் பணத்தைப்போல் 2 மடங்கு பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என்றும் ஒருவர் ஆசை காட்டியுள்ளார். இதையடுத்து அங்குராஜ் ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்த நிலையில், அங்கு சென்ற 5 பேர், அமலாக்கத்துறையினர் எனக்கூறி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி திருப்பூர் போலீசார், விஜய்கார்த்தி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், 2 கார் மற்றும் 88 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து, மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.

Night
Day