திருப்பூர்: 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்கிணறு பகுதியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பல்லடம் போலீசார் 5 பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற வெங்கடேஷ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day