திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தியும், முகத்தில் ஆசிட் அடித்தும் இளைஞர் வெறிச்செயல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தியும், முகத்தில் ஆசிட் அடித்தும் இளைஞர் ஒருவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குர்ரம் கொண்டா நகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், மதனபள்ளியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது, சக மாணவன் கணேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கணேஷ் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பெற்றோர் கூறும் பையனை தான் திருமணம் செய்வேன் என கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர், சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியும், முகத்தில் ஆசிட் அடித்தும் தப்பிச்சென்றதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தலைமறைவான இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day