திருவண்ணாமலை: கிணற்றில் விழுந்து சிறுமி பலி - நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த வழக்கில் நில உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு புலவன்பாடி பகுதியை சேர்ந்த மலர்கொடி என்பவர், வேலைக்கு சென்றபோது தனது 5 வயது மகள் தேவியை உடன் அழைத்து சென்றுள்ளார். சங்கர் என்பவருடைய நிலத்தில் வேலை செய்தபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நில உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனையொடுத்து களம்பூர் போலீசார் சங்கரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Night
Day