க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் நில வரன்முறை செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திமுக ஒன்றியக் குழு தலைவரின் உதவியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனது காலி மனையை நில வரன்முறைப்படுத்த பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார். அப்போது அங்கிருந்த திமுக ஒன்றிய குழு தலைவரின் உதவியாளர் கிரிதரன் மற்றும் திட்டப்பிரிவு உதவியாளர் தியாகராஜன் ஆகியோர் 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து இளையராஜா லஞ்ச ஒழிப்பு துறையினரிடன் புகாரளித்தார். பின்னர் அவர்கள் அளித்த அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை இளையராஜா கொடுத்த போது, அதை வாங்கிய கிரிதரன் மற்றும் தியாகராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப்பிடித்து கைது செய்தனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...