தூத்துக்குடி - மாயமான சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன், இன்று, பக்கத்து வீட்டு மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்- பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று உடல் நலக்குறைவால் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் திடீரென மாயமாகினார். அங்குமிங்கும் தேடிய பெற்றோர், சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்தனர். 
போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், பக்கத்து வீட்டு மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். மேலும் சிறுவன் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயின் மற்றும் மோதிரம் மாயமாகி இருந்தது. நகைக்காக சிறுவன் கொல்லபட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

Night
Day