தூத்துக்குடி: பகுதி நேர வேலை என கூறி ரூ.11.70 லட்சம் பண மோசடி - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த வாவு யூவியாஸ் பாக்மீ என்பவரின் மருமகன் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் பகுதி நேரம் வேலை குறித்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. குறுஞ்செய்தி அனுப்பிய நபரை, வாவு யூவியாஸ் பாக்மி தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர் திசையில் இருந்து பேசிய நபர் வாவு யூவியாஸ் பாக்மியிடம் ஆசை வார்த்தை கூறி 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாவு யூவியாஸ் பாக்மி அந்நபரிடம் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்நபர், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து, வாவு யூவியாஸ் பாக்மி அளித்த புகாரின்பேரில் குற்ற செயலில் ஈடுபட்ட ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day