தூத்துக்குடி: பெண் தூய்மை பணியாளர் வெட்டிக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டபிடாரம் அருகே பெண் தூய்மை பணியாளரை மகள் கண்முன்னே வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சின்னமணி  என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் வைரமுத்து உயிரிழந்த நிலையில், சின்னமணிக்கு கணவரின் சகோதரர் ராஜேஷ் கண்ணன் மற்றும்  பலருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னமணிக்கும், ராஜேஷ் கண்ணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மகள் முத்துதிவ்யாவுடன் எப்போதும் வென்றான் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சின்னமணியை ராஜேஷ் கண்ணன்  சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலையாளி ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர். 

varient
Night
Day