க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதிநேர வேலை தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இணையதளத்தில் பகுதிநேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை நம்பிய கண்ணன், அந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ரேட்டிங்ஸ் கொடுப்பதன் மூலம் பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பிய லிங்க் மூலம் ரேட்டிங் செய்து சிறிய தொகை பெற்ற கண்ணன், பின்னர் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு தவணை முறையில் சுமார் 34 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கண்ணன், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை மீட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...