தென்காசி: பழைய மென்பொருட்கள் கடையில் கொள்ளையடித்த 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழைய மென்பொருள் கடையில் பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், பழைய மென்பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இவரது கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதுகுறித்து புகார் அளித்த ராஜேஷ், சரண்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில் மாவடிக்காலை சேர்ந்த சரண்குமார் என்பவர், ராஜேஷின் கடையில் பொருட்கள் வாங்குவது போல் கடையை நோட்டமிட்டு 3 பேருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சரண்குமார் உட்பட 4 பேரையும் தென்காசியில் வைத்து கைது செய்த போலீசார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Night
Day