க்ரைம்
மாணவியை கர்ப்பமாக்கிய உதவி பேராசிரியர் கைது
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் மாணவியை கர்ப்பமாக்கிய பல்கலைக்கழக உதவி ?...
தென்சாசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வேன் ஓட்டுநரை காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான முருகன் வேன் ஓட்டும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் தனது வேனில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு ராஜபாளையம் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த வேன், ஆட்டோ ஒன்றின் மீது மோதியது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்ற போது, ஓட்டுநர் முருகன் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த முருகனின் உறவினர்கள் அவரது சடலத்தை பெற மறுத்து, காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், முருகனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் மாணவியை கர்ப்பமாக்கிய பல்கலைக்கழக உதவி ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...