தேனி பூதிபுரம் நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான சாலைக்கு நடுவே அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடைகளல் விபத்துகளும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

varient
Night
Day