க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தனியார் வங்கி ஊழியர்கள் கடனை கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த செவத்திவீரர் என்பவர் தனியார் வங்கியில் கடன் பெற்றதாகவும், கடனை திருப்பி செலுத்த கால தாமதமானதால் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவத்திவீரன், மனைவி ஒச்சம்மாள் மற்றும் மகன் ராஜேஷுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வெகுநேரமாக வீட்டில் இருந்து யாரும் வெளிவராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், வீட்டில் இறந்து கிடந்த மூவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...