க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தேனி மாவட்டம் போடி அருகே இருசக்கர வாகனம் மீது திமுக நிர்வாகியின் கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அணைக்கரைபட்டி பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்ற விவசாயி, இன்று காலை தனது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். காளியம்மன் கோவில் அருகே சென்றபோது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகி மனோஜ் என்பவரது கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி சென்ற சுந்தர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...