தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் தங்கநகை, ரூ.20 லட்சம் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில், தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் தங்க நகை மற்றும் 20 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நுங்கம்பாக்கம் லேக் வியூ 5-வது தெருவில் வசித்து வரும், பிரபல தொழிலதிபரான அபூபக்கர், நேற்று குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 150 சவரன் தங்க நகை மற்றும் 20 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து மோப்பநாய் உதவியுடன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சிசிடிவி பதிவுகளை வைத்தும், ஊழியர்கள் மற்றும் காவலாளியிடமும் விசாரணை நடத்தினர்.

Night
Day