நகைகள் திருட்டு குறித்து விசாரணை நடத்தியதால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நகைகள் திருட்டு குறித்து விசாரணை நடத்தியதால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் திருடுபோனது தொடர்பாக கடந்த 14-ம் தேதி மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நகை திருட்டப்பட்டது குறித்து அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண்ணான லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் நகைகளை திருடவில்லை எனக்கூறிய லட்சுமியிடம், போலீசார் இன்று விசாராணைக்கு வருமாறு எழுதி வாங்கி கொண்டு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்தது குறித்து மன உளைச்சலில் இருந்த பணிப்பெண் லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

varient
Night
Day