நகை வியாபாரியிடம் போலீசார் போன்று நடித்து ரூ.1.10 கோடி பணம் கொள்ளை - 4 பேர் தப்பி ஓட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கயம் அருகே காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபடுவது போன்று நடித்து ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடிய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கரூரைச் சேர்ந்த நகை வியாபாரியான வெங்கடேஷ் என்பவர், கோவையில் நகை வாங்குவதற்காக காரில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாயுடன் சென்றுள்ளார். இவரது கார் ஊதியூர் காவல் நிலைய பகுதி சம்பந்தம் பாளையம் பிரிவு அருகே சென்ற போது,  மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்களை காவல்துறையினர் என்று கூறிக் கொண்டு காரை நிறுத்தியுள்ளனர். 

மேலும் வேங்கிபாளையம் வாய்க்கால் அருகே காரில் சோதனை செய்வது போன்று 
அந்த கும்பல் நடித்துள்ளது. அப்போது வெங்கடேஷிடம் 2 பேக்கில் இருந்த ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மற்றும் அவர் வைத்திருந்த 3 செல்போன்களையும் பறித்துக் கொண்ட அந்த கும்பல் மற்றொரு காரில் தப்பிச் சென்றது. 

இதனால் அதிர்ந்து போன அளித்த புகாரின்பேரில் வழக்‍கு பதிந்து காங்கயம் மற்றும் ஊதியூர் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழிபறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Night
Day