எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி உயிரிழந்த விவகாரத்தில், நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்பவர், கடந்த ஆண்டு நசரத்பேட்டை அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான சாந்தகுமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சாந்தகுமார், காவல் நிலையத்தில் கையெழுத்து இடுவதில் காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சாந்தகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சாந்தகுமாரை அடித்து கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய நிலையில், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.