நடிகை சோனா வீட்டில் கத்தியைக் காட்டி திருட முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மதுரவாயலில் நடிகை சோனா வீட்டில் மர்மநபர்களால் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணாநகர் பகுதியில் வசித்துவரும் நடிகை சோனாவின் வீட்டின் சுவர் ஏறி குதித்து, வெளியே இருந்த ஏசி யூனிட்டை 2 பேர் திருட முயன்றுள்ளனர். நாய்கள் குரைத்ததால் வெளியே வந்த சோனா, திருடர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்போது 2 மர்மநபர்களும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் தவறி விழுந்த நடிகை சோனாவுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day