நாகை: கடலில் மிதந்து கரை ஒதுங்கிய மீனவரின் உடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே இரு மீனவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் மாயமான மீனவரின் உடல் கடலில் மிதந்த வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் வெகுவாக பரவியது. நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காலத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மீனவர்கள் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிவனேசெல்வன் உயிரிழந்த நிலையில் நேற்று கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் காலாத்தி நாதனின் உடல் கல்லார் கடலில் மிதந்து கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day