நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலந்து தாய், தாத்தாவை கொலை செய்ய முயன்ற பேரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்துக்கொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி என்ற இளைஞர், இரு தினங்களுக்கு முன் நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில், 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு, வீட்டில் உள்ள தனது குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளார். இதனை சாப்பிட்ட குடும்பத்தினரில் பகவதியின் தாய் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதன் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்து சீல் வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பகவதியின் தாத்தா சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தாய் நதியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்தில் சிக்கன் ரைஸை ஆய்வு செய்தபோது, அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது உறுதியானது. இது குறித்து பகவதியிடம் விசாரணை செய்தபோது, தன்னுடைய தவறான நடவடிக்கைகளை தாய் மற்றும் தாத்தா கண்டித்து வந்ததால் அவர்களுக்கு பூச்சி மருந்து கலந்த உணவை வழங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து பகவதியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day