எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நிலத்தகராறு காரணமாக பெரியப்பாவை கொலை செய்த தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.
கருவலூர் அனந்தகிரி பகுதியை சேர்ந்த சடையப்பன் மகன் கோவிந்தசாமி என்பவர் பனியன் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தசாமி காணவில்லை என அவரது மகன் காவல்நிலையித்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவிந்தசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், தொரவல்லூர் குளத்தில் கோவிந்தசாமியின் உடல் சாக்கு மூட்டையில் கிடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்தனர்.
இதுகுறித்த விசாரணையில், நிலத்தகராறு காரணமாக கோவிந்தசாமியை அவரது தம்பி மகன் ரமேஷ் என்பவர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக தம்பி மகனே பெரியப்பாவை கொலை செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.