நீதிமன்றம் முன்பு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - 7 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. 

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சமாதானபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிமன்றத்திற்கு முன்பாக மாயாண்டியை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 7 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தங்க மகேஷ், மனோராஜ் உள்ளிட்ட ஏழு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Night
Day