நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை சக வழக்கறிஞர் உதவியாளர் சரமாரியாக வெட்டிய பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர், இன்று வழக்கம்போல் வழக்கு புத்தகங்களுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். இதனை நோட்டமிட்டு வந்த மற்றொரு வழக்கறிஞரின் உதவியாளரான ஆனந்தன் என்பவர், வழக்கறிஞர் கண்ணனின் பின்னால் நின்று அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். தாக்குதலில் காயமடைந்து கீழே விழுந்த கண்ணனின் தலையில், தான் வைத்திருந்த அரிவாளால் தொடர்ந்து ஆனந்தன் கொடூரமாக தாக்கினார். பட்டபகலில் நடந்த இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கண்ணனை சக வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே வழக்கறிஞரை தாக்கிய ஆனந்தன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day