நீலகிரி: நீதிமன்ற வளாகத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதகையில் போக்சோ வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் நீதிமன்ற வளாகத்திலேயே முதியவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீரிகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முதியவர் கடந்த 2022 ஆண்டு, பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முதியவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் நீதிமன்ற வளாகத்திலேயே தனது கையில் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Night
Day