நெல்லை : நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 3-வது நாளாக ஐடி ரெய்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பணம் பதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நெல்லை பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ் முருகனின் அலுவலகத்தில் 3-வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day