க்ரைம்
ரயில் நிலையத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ஐ பேட் திருட்டு - இளைஞர் கைது...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆபாசமாக பேச வைத்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரவநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியை, அங்கு பணிபுரியும் மங்களம் என்ற ஆசிரியரின் பணிகளில் திருப்தி இல்லாததால் அவருக்கு மெமோ வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்களம், அப்பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மாணவிகளை வைத்து, தலைமை ஆசிரியர் குறித்து பாலியல் ரீதியாக தரக்குறைவாக பேச வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் மங்களம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...