பங்குச் சந்தை முதலீடு மோசடி - ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ரூ.90 லட்சம் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் 90 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் நம்பியார் என்பவரிடம் 90 லட்சம் ரூபாயை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எனக் கூறி ஆதித்யா பிர்லா ஈக்விட்டி லேர்னிங் குரூப் எனும் வாட்ஸ் அப் குழுவில் இணைத்த மோசடி கும்பல், செலுத்தப்படும் மொத்த தொகையில் 850 சதவீதம் லாபம் கிடைக்கும் எனக்கூறி சுமார் 90 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த நீதிபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மீது வழக்குப்பதிவு செய்த கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day