பனியன் வேஸ்ட் குடோனுக்கு தீ..! தொழில் போட்டியில் திமுக நிர்வாகி அராஜகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் வேஸ்ட் துணி குடோனுக்கு தீ வைத்த சம்பவத்தில் திமுக நிர்வாகி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குடோனுக்கு தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் என்ன நடந்தது என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!

திருப்பூர் மணியக்காரம் பாளையம் பகுதியில் KMP TEX என்ற பேரில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார் ஷரிப். பனியன் நிறுவனத்தில் ஆடைகளை தைக்கப்படும் போது CUTTING-ல் விழும் சிறு சிறு துண்டு துணிகளையேல்லாம் சேகரித்து குடோனில் இருப்பு வைத்து, பின் அவற்றை மீண்டும் பஞ்சாக்கும் குடோனுக்கு அனுப்பி வைப்பது தான் ஷரிப்பில் வேலை. 


3 மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஷரிப்பின் பனியன் வேஸ்ட் குடோன் அமைந்திருந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் குடோனுக்கு வந்த மர்மநபர்கள் இருவர் குடோனுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். துணி குடோன் என்பதால் மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில், தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கிய போதுதான், துணி குடோனுக்கு மர்மநபர்கள் தீ வைத்துச் சென்றது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெள்ளத்தெளிவாக பதிவாகியிருந்தது. 


சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த, இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்தது திமுக நிர்வாகி என்ற விவரம் அம்பலமானது. சிசிடிவி கேமராவில் தென்பட்ட மர்மநபர்கள் மார்ஷல் மற்றும் சதீஷ் என்பது இவர்கள் திமுக திருப்பூர் மாநகர தெற்கு பொறியாளர் பிரிவு அமைப்பாளர் வெங்கடேஷின் கார் ஓட்டுநர் மற்றும் அசிஸ்டன் என்பதும்  தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குடோனுக்கு தீ வைத்துவிட்டு மறுநாள் ஒன்றுமே தெரியாதது போல ஷரிப்பை நலம் விசாரிக்க சென்ற திமுக நிர்வாகி வெங்கடேஷ் போலீசாரின் விசாரணையில் ஆதாரங்கள் ஏதேனும் சிக்கியுள்ளனவா? என நோட்டமிட்டுள்ளார். அப்போது சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமரா ஏதாவது உள்ளதா? என வெங்கடேஷ் அங்கிருந்தவர்களின் ரகசியமாக விசாரிக்க, அதுவே திமுக நிர்வாகி வெங்கடேஷ் போலீசில் சிக்குவதற்கான வலுவான ஆதாரமாக மாறியிருப்பது சொந்தகாசில் சூனியம் வைத்துக்கொள்ளும் ரகமாக உள்ளது.!

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில் திமுகவினர் செய்யும் அட்டகாசங்களுக்கும் அடாவடித்தனத்துக்கும் அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் அந்த கிரைம் ரேட்டின் எண்ணிக்கையை கூட்டியிருக்கிறது இந்த திருப்பூர் சம்பவம்.

Night
Day